மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜி ஜின்பிங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அசாதாரண வேகத்துடன், சர்வதேச நிதி மூலதனத்தின் விருப்பத்திற்கிணங்க 'உத்வேகமான பூஜ்ஜிய-கோவிட்' கொள்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கைவிட்டு வருகிறது. எந்த ஒரு பெரிய நாட்டிலும் இல்லாதளவுக்குச் சீனா மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கை கொண்டிருந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பின்னர், வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இந்தக் குற்றகரமான கொள்கை மாற்றத்தின் விளைவாக, அது பாரிய வெகுஜன மரணங்கள் மற்றும் துயரங்களைப் பார்க்கக் கூடும்.
நாடு முழுவதும் கோவிட்-19 நோயாளிகள் அதிகரித்து வரும் நிலைமைகளின் கீழ், வெகுஜன பரிசோதனை, தனிமைப்படுத்தல், எல்லை மேலாண்மை, சமூக அடைப்புகள் மற்றும் இன்னும் பல வழிகாட்டி நெறிமுறைகளைத் தளர்த்தி விட்ட '20 ஷரத்துக்கள்' வெளியிட்டதன் மூலம், பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைக் கைவிடுவதற்கான நிகழ்வுபோக்குத் தெளிவாக நவம்பர் 11 இல் தொடங்கியது.
புதன்கிழமை, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் 10 அம்சத் திட்டம் ஒன்றை அறிவித்தது, அது பூஜ்ஜிய-கோவிட் கட்டுப்பாடுகளை இன்னும் கூடுதலாக நீக்கி இருந்தது. இந்தத் திட்டம் வெகுஜனப் பரிசோதனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், நோய்தொற்று ஏற்பட்டவர்களை ஒழுங்குமுறையாக தனிமைப்படுத்துவதில் இருந்து அவர்கள் தன்னார்வத்துடன் தங்களைத்தாங்களே ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைத்துக் கொள்வதை நோக்கி நகர்ந்துள்ளது, மேலும் பெரியளவில் சமூக அடைப்புகள் இருக்காது என்றும் அது அறிவித்தது. அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் பத்திரிகை, இந்தப் புதிய கோவிட்-19 கொள்கைகளை 'மக்களின் நகர்வைக் கட்டுப்படுத்தாமல் இருக்க, வேலை, உற்பத்தி அல்லது வணிக நடவடிக்கைகளை இடைநிறுத்தம் செய்யாமல் இருக்க' வடிவமைக்கப்பட்டுள்ளதாக தொகுத்தளித்தது.
புதனன்று வெளியிடப்பட்ட இந்த வழிகாட்டி நெறிமுறைகள் செவ்வாய்கிழமை நடந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்டன, சின்ஹூவா வெளியிட்ட ஒரு சிறுகுறிப்பின்படி, முன்னோக்கி செல்கையில் முதல் முன்னுரிமை உயிர்களைக் காப்பாற்றுவதில்லை மாறாக 'சந்தை நம்பிக்கையைப் பலமாக ஊக்குவிப்பதும்' மற்றும் 'வெளி உலகிற்கு உயர்மட்ட அளவில் திறந்து விடுவதும் மற்றும் அன்னிய முதலீட்டை ஈர்த்து அதைப் பயன்படுத்தப் பெரியளவில் முயற்சிகள் செய்வதும்' ஆகும் என்பதில் CCP பொலிட்பீரோ உடன்பட்டது.
உலக முதலாளித்துவத்தின் முன்னணிப் பிரதிநிதிகள் —அதாவது, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) ஆகியவற்றின் தலைவர்கள்— அவர்களின் '1+6 உச்சிமாநாட்டுக்காக' இந்த வாரம் சீனாவில் கூடியுள்ளனர், சீனா வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்படுவதாகவும், கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான சமூக அடைப்புகள் மற்றும் பிற பொது சுகாதார நடவடிக்கைகள் இனி இருக்காது என்றும் அந்த உச்சிமாநாட்டில் CCP உத்தியோகபூர்வமாக உறுதியளித்துள்ளது.
சீன அரசாங்கம் அந்நாட்டின் கோவிட்-19 கொள்கையில் கொண்டு வந்துள்ள அதன் மாற்றங்களை விஞ்ஞானபூர்வ மறுசீரமைப்பாக முன்வைக்கிறது. ஆனால் அது அப்படியான எதுவும் இல்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெகுஜன பரிசோதனைகளைக் கைவிடுகிறது மற்றும் ஒழுங்குமுறையாகக் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகளை நீக்கி வருகிறது. இப்போது உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையை நோக்கி அவர்கள் மிக வேகமாக நகர்ந்து வருகிறார்கள், முதலாளித்துவ அரசாங்கங்கள் இந்தக் கொள்கை மூலமாக அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் நீக்கி, சமூகம் 'இந்த வைரஸூடன் வாழ கற்றுக் கொள்ளட்டும்' என்று கோரி வேண்டுமென்றே பெருந்திரளான மக்களை இந்த நோய்தொற்றுக்கு உள்ளாக்கி உள்ளன.
சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை நீக்கப்படுவதை சமூக அடைப்புகளுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்களுக்கான விடையிறுப்பாக மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிக்கின்றன, அந்தப் போராட்டங்கள் பல்கலைக்கழகங்களில் வசதியான நடுத்தர வர்க்க அடுக்குகளை மையமாகக் கொண்டிருந்தன. அதன் ஆழ்ந்த மக்கள்விரோத கோவிட்-19 கொள்கைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பின் பேராபத்தைக் கண்டு மிரண்டு போன CCP, நீண்டகாலமாக வைத்திருந்த அதன் கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கி வருவதாக மேற்கத்திய பிரச்சாரகர்கள் வாதிடுகின்றனர். இந்தச் சொல்லாடலில் ஒரேயொரு வார்த்தை கூட உண்மை இல்லை.
அக்டோபர் மற்றும் நவம்பரில் ஷாங்காயில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டு, UC சான் டியாகோவில் உள்ள சீனா தரவு ஆய்வகத்தில் வெளியிடப்பட்ட அது, மக்களில் வெறும் 11.9 சதவீதத்தினர் மட்டுமே அந்நாட்டின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையில் 'மிகப் பெரியளவில் மறுசீரமைப்பு' செய்வதை ஆதரித்திருந்தனர். இந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக, அதாவது 24.4 சதவீதத்தினர், பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை 'மறுசீரமைப்பு செய்யாமல் அப்படியே நிலைநிறுத்த வேண்டும்' என்று கூறி இருந்தனர். அந்த ஆய்வில் பெரும்பான்மையினர், 58.5 சதவீதத்தினர், பூஜ்ஜிய-கோவிட் கொள்கையில் 'குறிப்பிட்ட சில விஷயங்களில் மறுசீரமைப்பு' தேவை என்றும், ஆனால் 'பெரியளவிலான மறுசீரமைப்பு' தேவையில்லை என்றும் கூறி இருந்தனர். பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு உள்ளது, அதில் கலந்து கொண்டவர்களில் முழுமையாக 83 சதவீத்தினர் அது தொடர வேண்டுமென விரும்புகிறார்கள்.
சீனா தரவு ஆய்வக ஆய்வு ஷாங்காயில் நடத்தப்பட்டது என்ற உண்மை குறிப்பிடத்தக்கதாகும். 25 மில்லியன் மக்கள் கொண்ட அந்நகரம், பொருளாதார ரீதியாக முக்கியமானது என்பதுடன், அங்கே பாரியளவில் தொழிலாள வர்க்கத்தினர் உள்ளனர், கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஷாங்காய் பல நீடிக்கப்பட்ட சமூக அடைப்புகளைக் கண்டது. ஒருவர் மேற்கத்திய ஊடகங்களின் விபரங்களை நம்புவாரேயானால், பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு எதிராக அதிகளவிலான பரந்த எதிர்ப்புணர்வு வேறெந்த நகரத்தையும் விட ஷாங்காயில் தான் அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் கருத்தை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்யும் போது, இந்தப் பெருந்தொற்று பரவலைத் தடுக்க அவசியமான பொது சுகாதார நடவடிக்கைகளை தொடர்வதற்கே ஒருவர் பெருவாரியான ஆதரவைக் காண்கிறார்.
மேற்கத்திய ஊடகங்கள் மேற்கோள் காட்டும் போராட்டங்கள் சிறியளவில் இருந்தன, 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் அவை நூற்றுக் கணக்கில் இருந்தன என்பதோடு, ஏறக்குறைய பெரும்பாலும் பிரத்யேகமாக அந்நாட்டின் உயரடுக்கு பல்கலைக்கழகங்களின் உயர்மட்ட நடுத்தர வர்க்க மாணவர்களிடையே இருந்தன. இந்தப் போராட்டங்கள் பரந்த சீன மக்களின் உணர்வைத் தூண்டும் நோக்கத்தில் அல்ல மாறாக மேற்கத்திய செய்தியாளர்களுக்குப் புகைப்படக் காட்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்டன. இந்தப் போராட்டக்காரர்கள் அனைத்து முக்கிய சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர், அவர்கள் அந்தப் பேரணிகளில் வைக்கப்பட்டிருந்த வெற்று காகித துண்டுகளை புகைப்படம் எடுத்து, சீனாவில் 'சுதந்திரத்தின்' பிறப்பு என்று பரவசமான தலையங்கங்களை எழுதினர்.
உலக சோசலிச வலைத் தளம் ஆவணப்படுத்தியுள்ளபடி, பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைக் கைவிடுவதற்கான CCP இன் நகர்வுகள், இந்தப் போராட்டங்களுக்கு முன்பிருந்தே மேற்கொள்ளப்பட்டன. பகுப்பாய்வின் இறுதியில், இந்தப் போராட்டங்கள் CCP ஏற்றுக் கொண்ட கொள்கைகளை நியாயப்படுத்தும் சமூகச் செயல்பாடாக சேவையாற்றின, ஏதோ சீன மக்கள் நோய்தொற்றுக்கு ஆளாக வேண்டுமென ஏங்கித் தவித்துக் கொண்டிருப்பதைப் போல, மக்கள் கோரிக்கையின் வெளிப்பாடாகவே இந்தப் பெருந்தொற்றுக்குத் திறந்து விடப்படுவதாக காட்டப்படுகிறது.
சீனாவில் வெகுஜன நோய்தொற்று ஏற்படுத்துவதற்கான கோரிக்கை சீன மக்களிடமிருந்து அல்ல, மாறாக உலக முதலாளித்துவத்திடம் இருந்து வருகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று குறிப்பிடுகையில், 'வணிகங்களுக்கு உள்ள இடையூறுகள், உலகின் தொழிலகத் தளமான அந்நாட்டின் அந்தஸ்தையே அச்சுறுத்துகிறது' என்று எழுதியது. சீனாவில் ஆப்பிள் ஐபோன்களைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்குப் பொறுப்பான நிறுவனமும், இப்போது ஃபாக்ஸ்கான் உற்பத்தி ஆலைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதுமான ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தின் நிறுவனர் டெர்ரி குவோ, “கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் உலகளாவிய வினியோகச் சங்கிலியில் சீனாவின் முக்கிய இடத்தை அச்சுறுத்தவதாக ஆகிவிடும்,” என்று நவம்பர் தொடக்கத்தில் CCP அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். உற்பத்தியை வேறு இடத்திற்கு மாற்றுவது பற்றி யோசித்து வருவதாக ஆப்பிள் சமிக்ஞை செய்தது. சாம்சுங், நைக், வோக்ஸ்வாகன் மற்றும் பிற முக்கிய சர்வதேச நிறுவனங்களிடம் இருந்தும் இதே போன்ற சலசலப்புகள் இருந்தன.
சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதுடன், அந்த வைரஸ் நாட்டை நாசமாக்குவதைத் தடுத்தது. அது சமூகத்தின் உயர்மட்டத்தில் இருந்து அடிமட்டத்தின் மீதான திணிப்பு அல்ல, மாறாக பரந்த கூட்டு முயற்சிகளின் திட்டமிட்ட ஒருங்கிணைந்த அணிதிரட்டலாகும். தேசத்தின் பொது சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக சீன மக்கள் தியாகம் செய்து ஒன்றாக உழைத்தனர்.
அந்தக் கொள்கை வெற்றிகரமாக இருந்தது என்றாலும், செலவு மிக்கதாக இருந்தது. சீனா அதன் நவம்பர் மாத வர்த்தகப் புள்ளிவிபரங்களைச் சமீபத்தில் வெளியிட்டது, அவை இரண்டரை ஆண்டுகளில் மிக மோசமான மாதாந்திர புள்ளிவிவரங்களாக இருந்தன, இதன் காரணமாக, South China Morning Post, 'பூஜ்ஜிய-கோவிட் கொள்கை இந்தாண்டு பொருளாதாரத்தைக்' 'கடுமையாக பாதித்து' விட்டதாக அறிவித்தது. ”பாரிய பரிசோதனைகள், சமூக அடைப்புகள் மற்றும் சீனாவுக்கு வெளியே உருவான புதிய வகைகள் மீண்டும் மீண்டும் ஊடுருவியமை, இத்துடன் சேர்ந்து அரசின் ஆதாரவளங்களும் பெரிதும் வற்றிப்போனது. மற்ற ஒவ்வொரு அரசாங்கமும் அனைத்து கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளையும் கைவிட்டுள்ள ஓர் உலகில் பொது சுகாதார நடவடிக்கைகளைத் தக்க வைப்பதற்குத் தேவையான தனிமை, பொருளாதார அபாயங்களுடன் சேர்ந்திருந்தது. முதலாளித்துவ இலாபங்களுக்காக உற்பத்தியை முழு அளவில் மீட்டமைப்பதற்காக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை, அந்நாட்டைத் திறந்து விட நகர்ந்து வருகிறது.
சீனா வணிகத்திற்காக திறந்திருப்பதாகவும், சமூக அடைப்புகளின் சகாப்தம் முடிந்துவிட்டதாகவும் முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க CCP முண்டியடித்தது. செவ்வாய்கிழமை, அமெரிக்காவுக்கான சீனத் தூதர் Qin Gang, பிரபல அமெரிக்க-சீனா வணிகக் கவுன்சிலில் உரையாற்றுகையில், 'அமெரிக்காவுடன் வணிகப் பரிமாற்றங்களைச் சுமூகமாக்க' சீனா அதன் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையில் 'ஆக்கபூர்வமான மறுசீரமைப்புகளை' செய்து வருவதாக அவர்களுக்கு உறுதியளித்தார். அமசன், ஆப்பிள், ஜெனரல் மோட்டார்ஸ், பெப்சி, போயிங், நைக், ஜேபி மோர்கன் சேஸ், டொவ், அபோட் மற்றும் ஃபைசர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அங்கே பார்வையாளர்களாக இருந்தார்கள். அந்தச் செய்தி தெளிவாக இருந்தது. சீனத் தொழிலாள வர்க்கத்தை அணுகுவதில் இனி எந்த இடையூறும் இருக்காது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்க பெருவணிகத்திற்கு உறுதியளித்தது.
ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் இதே போன்ற உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன. ஐரோப்பிய வர்த்தக சம்மேளன தலைவர் ஓர் அறிக்கையை வெளியிட்டார்: 'இந்த திடீர் கொள்கை மாற்றத்தை இந்த வளாகம் நிச்சயமாக வரவேற்கிறது, இது, முதல்முறையாக, ஒரு மூலோபாயத்தில் இருந்து [பூஜ்ஜிய-கோவிட் கொள்கையில் இருந்து] வெளியேறுவதைக் குறிக்கிறது — இது மிகவும் முக்கியம்.” இது, 'ஐரோப்பிய வணிகத்திற்கு மிகவும் வரவேற்கத்தக்கது' என்றவர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ்; சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா; உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குனர் Ngozi Okonjo-Iweala; சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) பொது இயக்குனர் Gilbert Houngbo; பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) பொதுச் செயலாளர் மத்தியாஸ் கோர்மன்; மற்றும் நிதி ஸ்திரத்தன்மை வாரியத்தின் தலைவரான கிளாஸ் நாட் —அதாவது, நடைமுறையளவில் உலக முதலாளித்துவத்தின் பொது கவுன்சிலே— அனைவரும் '1+6 வட்டமேசை விவாதத்திற்காக' சீனாவின் ஹுவாங்ஷானில் ஒன்று கூடியிருந்தனர்.
சீனப் பிரதமர் லீ கெகியாங் அவர்களை வரவேற்று சீனப் பொருளாதாரம் குறித்து அவர்களுடன் பேசினார். அவர் சமூக அடைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதியளித்ததுடன், 'சீர்திருத்தத்தையும் திறந்து விடுவதையும் ஆழப்படுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்திற்கு உத்வேகமூட்டும் சீனாவின் பொறுப்புறுதியை' வெளிப்படுத்தினார். 'பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதிலும் மற்றும் சமூக வளர்ச்சியிலும் நாங்கள் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்படுவோம், உற்பத்திக்கான நல்ஒழுங்கை பராமரிப்போம்' என்றவர் உறுதியளித்தார்.
முதலாளித்துவம் விழித்தெழுந்து மரணத்தைக் கொண்டு வருகிறது. பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைச் சீனா கைவிடுவதில் இருந்து அந்த வைரஸிற்குத் தான் நிஜமான வெற்றி கிடைக்கிறது. நோயெதிர்ப்புரீதியில் 1.4 பில்லியன் அப்பாவி மக்கள் நோய்தொற்றுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சீனாவின் வயதான முதியவர்கள் கணிசமானளவு குறைவாகவே தடுப்பூசி செலுத்தி உள்ளனர், இவர்கள் அதிக எண்ணிக்கையில் இறக்க வாய்ப்புள்ளது. இப்புவியில் வசிப்பவர்களில் நோய்தொற்றுக்கு உள்ளாகாத ஐந்தில் ஒரு பங்கினரை அணுக திடீரென திறந்து விடப்பட்டுள்ள கோவிட்-19, பரவி, உருமாறி, புதிய மற்றும் இன்னும் வீரியமான வகைகளை உருவாக்க இருக்கிறது.