ரஃபா மீதான திட்டமிட்ட தாக்குதலை நெதன்யாகு இரட்டிப்பாக்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிறன்று, 1.5 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் தங்கியுள்ள காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவை தாக்குவதற்கான அவரது திட்டங்கள் தொடரும் என்று கூறியுள்ளார்.

“எந்த சர்வதேச அழுத்தமும் இஸ்ரேலை நிறுத்தாது” என்று இஸ்ரேலின் அமைச்சரவை கூட்டத்தின் போது நெதன்யாகு கூறினார், “அதன் அனைத்து இலக்குகளையும் அடைவதற்கு முன்னர் நாம் இப்போது போரை நிறுத்தினால், இஸ்ரேல் போரை இழந்துவிட்டது என்று அர்த்தமாகும். நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.

“நாங்கள் ரஃபாவில் செயல்படுவோம், இது பல வாரங்கள் எடுக்கும், அது நடக்கும்” என்று நெதன்யாகு கூறினார்.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18, 2024 அன்று ஜெருசலேமில் உள்ள சகிப்புத்தன்மை அருங்காட்சியகத்தில் பேசுகிறார். [AP Photo/Ohad Zwigenberg]

வெள்ளியன்று, இஸ்ரேலிய இராணுவம் ரஃபாவில் ஒரு தாக்குதலுக்கான ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அங்கு தஞ்சமடையும் அகதிகளை வடக்கே உள்ள முகாம்களுக்கு இடமாற்றம் செய்ததுடன், இஸ்ரேலிய அதிகாரிகள் அதனை “மனிதாபிமான தீவுகள்” என்று அழைத்தனர்.

வியாழனன்று அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட் பெரும்பான்மை தலைவர் சார்ல்ஸ் சூமர் வழங்கிய ஒரு உரையைத் தொடர்ந்து நெதன்யாகு ரஃபாவை தாக்குவதற்கான அவரது திட்டங்களை மீண்டும் வலியுறுத்தினார். சூமர் நெதன்யாகுவை “சமாதானத்திற்கு” ஒரு “தடையாக” அழைத்ததுடன், பிரதம மந்திரி “அவரது வழியை இழந்துவிட்டார்” என்று தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஷூமரின் கருத்துக்களை திறம்பட ஆமோதித்தார். இது ஒரு “சிறந்த உரை” என்று கூறினார்.

ஆனால், அமெரிக்க அதிகாரிகளின் இந்த வாய்மொழி விமர்சனங்கள் இனப்படுகொலை நடத்தையில் எந்த விளைவையும் கொண்டிருக்கவில்லை என்பதை சனிக்கிழமை நெதன்யாகுவின் அறிக்கைகள் எடுத்துக்காட்டின. காஸாவின் ஒட்டுமொத்த மக்களும் பட்டினியின் விளிம்பில் இருக்கும் நிலையில், இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் 100 க்கும் மேற்பட்ட மக்களை தொடர்ந்தும் கொலை செய்து வருகிறது.

இவை அனைத்திற்கும் மத்தியில், இஸ்ரேலுக்கு அமெரிக்க நிதியுதவியும் ஆயுதங்களும் தடையின்றி தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன, அமெரிக்கா அதற்கு ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்குவதை நிறுத்துவதற்கு முன்னர் இஸ்ரேல் என்ன குற்றங்கள் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்பதற்கு அதற்கு “சிவப்புக் கோடுகள்” எதுவும் இல்லை என்பதை வெள்ளை மாளிகை ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது.

பொதுமக்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான ஒரு “திட்டம்” இருப்பதை ஒரே தகுதியாக ஆக்குவதன் மூலம் ரஃபா மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஏற்கனவே முன்கூட்டிய ஒப்புதலை வழங்கியுள்ளது.

கடந்த ஞாயிறன்று, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) காஸாவில் இன்றுவரை 13,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்தது. மேலும் காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்கு “அழுவதற்கு கூட சக்தி இல்லை” என்பதையும் சேர்த்துக் கொண்டது.

“இப்போது என்ன நடக்கிறது என்றால், ஏற்கனவே 13,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இது ஒரு வானளாவிய, திகிலூட்டும் எண்ணிக்கை” என்று யுனிசெப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் ஞாயிற்றுக்கிழமை சிபிஎஸ் நியூஸிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “இன்னும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் அல்லது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கூட எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம். மேலும் ஆயிரக்கணக்கானோர் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்துள்ளனர். இந்த குழந்தைகளில் சிலர், நீங்கள் அவர்களை செய்திகளில் பார்த்திருப்பீர்கள், அவர்கள் தங்கள் இளைய உடன்பிறப்புகளை நிர்வகிக்கிறார்கள். அதாவது, இது ஒரு பயங்கரமான சூழ்நிலை” என்று அவர் குறிப்பிட்டார்.

இரண்டு வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒருவர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரஸ்ஸல் கூறினார்.

“கடுமையான இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வார்டுகளில் நான் இருந்திருக்கிறேன், முழு வார்டும் முற்றிலும் அமைதியாக இருக்கிறது, ஏனென்றால் குழந்தைகள், பிள்ளைகள், அழுவதற்கு கூட சக்தி இல்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஞாயிறன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ஓக்ஸ்பாம், இஸ்ரேல் தொடர்ந்து “எந்தவொரு அர்த்தமுள்ள சர்வதேச மனிதாபிமான பதிலையும் திட்டமிட்டு தடுக்கிறது மற்றும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்று கூறியது.

பாலஸ்தீனர்களைக் கொல்வதை நிறுத்துமாறும், காஸாவிற்குள் உணவை அனுமதிக்குமாறும் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்த சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் காஸா மக்கள் வேண்டுமென்றே பட்டினிக்கு உள்ளாக்கப்படுவது மோசமடைந்துள்ளது என்று ஓக்ஸ்பாம் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஐ.சி.ஜே உத்தரவு இஸ்ரேலிய தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும், ஆனால் அதன் பின்னர் காஸாவின் நிலைமைகள் உண்மையில் மோசமடைந்துள்ளன” என்று ஓக்ஸ்பாம் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க இயக்குனர் சாலி அபி கலீல் ஞாயிற்றுக்கிழமை கூறினார். “இஸ்ரேலிய அதிகாரிகள் சர்வதேச உதவி முயற்சிகளை எளிதாக்கத் தவறியது மட்டுமல்லாமல், அதை செயலூக்கத்துடன் தடுக்கின்றனர். இனப்படுகொலையைத் தடுக்க இஸ்ரேல் அதன் சக்திக்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறிவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம்.”

இன்றுவரை, அக்டோபர் 7 முதல் காஸாவில் 32,000 க்கும் அதிகமானவர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது, பல்லாயிரக்கணக்கானவர்களை காணவில்லை. மார்ச் 14 மற்றும் 15 க்கு இடையில், இஸ்ரேலிய படைகள் காஸாவில் 149 பாலஸ்தீனியர்களை கொன்றன மற்றும் 300 க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்தின.

ஞாயிறன்று, இஸ்ரேலிய இராணுவம் மீண்டும் அல்-ஷிபா மருத்துவமனை மீது ஒரு தாக்குதலைத் தொடங்க இருப்பதாக அறிவித்தது, மருத்துவர்களும் நோயாளிகளும் இஸ்ரேலிய துருப்புக்களால் கொல்லப்படுவார்கள் என்ற சாத்தியக்கூறை இது எழுப்பியுள்ளது.

“உடனடி நடவடிக்கை தேவை என்று உறுதியான ஆதாரங்களைத் தொடர்ந்து ஷிஃபா மருத்துவமனையின் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் உயர் துல்லியமான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று, அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Loading