அரசாங்கங்களின் பதிலிறுப்பானது -அவற்றின் தயாரிப்பின்மை, தட்டுத்தடுமாறுகின்ற திறனற்றதன்மை, மற்றும் உழைக்கும் மக்களின் உயிர்களுக்கு அவர்கள் காட்டும் அப்பட்டமான அலட்சியம் ஆகியவை மனிதத் தேவைகள் முதலாளித்துவ இலாபங்களுக்கும் தனிமனித செல்வக்குவிப்பிற்கும் கீழ்ப்படியச் செய்யப்பட்டதன் விளைபொருளாக உலகெங்கும் பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா போன்ற கூட்டாளிகளின் ஆதரவுடன் சீனாவைப் பலிக்கடா ஆக்குவதற்கான அமெரிக்க முயற்சிகள், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் எதிர்ப்பு மத்தியில் அதன் சொந்த குற்றகரமான அலட்சியத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு குரூர முயற்சியாகும்.
ட்ரம்ப் நிர்வாகம், பிரிட்டன் மற்றும் பிரேசில் மற்றும் பிற அரசாங்கங்களுக்கு பேதப்பட்ட விதத்தில் பெருந்தொற்றுக்கான ஒரு மனிதாபிமானமிக்க பதிலிறுப்பை வழங்கியதற்கான ஒரு உதாரணமாக பெருநிறுவன ஊடகங்கள் நியூசிலாந்தைக் கொண்டாடுகின்றன.
தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பே, உலகப் பொருளாதாரத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி மற்றும் உழைக்கும் மக்களின் வளர்ந்து வரும் போராட்டங்கள், உலகளவில் முதலாளித்துவ ஆட்சிகளின் மீது ஒடுக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்து வருவதற்கான முன்னறிவிப்பாக இருந்தன.
டோரிகள் 'தாட்சர் புரட்சியை முடிவிற்குகொண்டுவர' விரும்புவதாகக் கூறினர். இதன் பொருள் என்ன என்பதை இப்போது நாம் அறிவோம்! அமெரிக்காவிற்கு வெளியே, நிதி தன்னலக்குழு சார்பாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மிக நீடித்த மற்றும் மிருகத்தனமான தாக்குதலால் இங்கிலாந்து ஒரு கொலைக் களமாக மாற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய முதலாளித்துவமும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் திவாலாகிப் போயுள்ளன. தொழிலாள வர்க்கம் இப்போது இரண்டு முனைகளில் போராட்டத்தை எதிர்கொள்கிறது: ஒன்று COVID-19 க்கு எதிரான போர், மற்றது வர்க்கப் போர்.
ஜேர்மன் அரசாங்கம் மார்ச் மாதம் பெரிய வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் 600 பில்லியன் யூரோ அரசு நிதிகளை வழங்கிய அதேவேளையில், தொழிலாளர்களுக்கு ஒன்றும் வழங்கப்படவில்லை. பல நிறுவனங்களும் நீண்டகாலமாக அவை திட்டமிடப்பட்டு வந்த பாரியளவிலான பணிநீக்கங்களை முன்நகர்த்துவதற்கு இந்த நெருக்கடியைப் பயன்படுத்துகின்றன.
ஏகாதிபத்தியம் நோய் விடுப்போ விடுமுறையோ எடுக்கவில்லை; அது தூங்கவுமில்லை. பெருந்தொற்றுக்கு எதிராய் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதான போலியான பேச்சுக்கள் ஒருபக்கம் இருந்தாலும், அமெரிக்க ஆளும் வர்க்கமானது இந்த பெருந்தொற்றை போருக்கான ஒரு சாதனமாகவே காண்கிறது
உலக முதலாளித்துவ உயரடுக்கின் உதாசீனமும் குற்றவியல்தனமான அலட்சியமும் பிரேசிலின் பாசிச ஜனாதிபதியான ஜேர் போல்சனரோவின் வடிவில் அதிகக் கொடூர வெளிப்பாட்டை காண்கின்றன.
வேலைக்குத் திரும்புங்கள் பிரச்சாரமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு குறிப்பாக மெக்சிகோ உற்பத்தி ஆலைகளில் ஒரு அவசர பண்பை எடுத்துள்ளது
கொரோனா வைரஸ் ஒரு இயற்கை நிகழ்வுதான், என்றபோதும் அது ஒரு குறிப்பிட்ட சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புக்குள்ளாக தோன்றி, அபிவிருத்தியடைந்திருக்கிறது
உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான ICFI நடத்திய ஆறாவது வருடாந்தர மே தின பேரணியான 2019 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) சனிக்கிழமை, மே 4 இல் நடத்தியது. இந்த பேரணியில் அந்த உலக கட்சியினதும் மற்றும் அதன் பிரிவுகளினதும் மற்றும் உலகெங்கிலுமான அதன் ஆதரவான அமைப்புகளினதும் 12 அங்கத்தவர்கள் முதலாளித்துவத்தின் உலக நெருக்கடி மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டங்களின் வெவ்வேறு அம்சங்களைக் குறித்து உரையாற்றினர்
2019 மே தினத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சீனாவில் மே 4 இயக்கத்தின் நூறாவது ஆண்டின் வேளையில் சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விசேட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது
அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அத்தனை குற்றங்களும் வெடித்து வெளிவந்திருக்கின்றன. “பயங்கரவாதத்தின் மீதான போர்”, சித்திரவதை, குவாண்டனமோ சிறை, அசாதாரண கைதி ஒப்படைப்பு, படுகொலைகள் ஆகியவை மூலமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்
David North
மே தினம் 2018 சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஏனென்றால் நாம் இந்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான தினத்தை மட்டுமல்ல, மாறாக கார்ல் மார்க்ஸ் பிறந்த 200 ஆம் நினைவாண்டையும் கொண்டாடி வருகிறோம்.
இந்தியாவில் ஸ்ராலினிஸ்டுகள், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துக்கு அடிபணியச் செய்வதற்கான அவர்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதன் மூலமே தீவிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டதுக்கு பிரதிபலிக்கின்றனர். இந்த ஸ்ராலினிஸ்டுகள் பா.ஜ.க.க்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்டு, இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியும் உலக மூலதனத்திற்காக இந்தியாவை மலிவு உழைப்பு களமாக ஆக்கவும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் 'பூகோள மூலோபாய பங்கான்மையை' ஏற்படுத்திக்கொள்ளும் அதன் உந்துதலில் முன்னணியில் இருக்கின்றதுமான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கான தமது தயார் நிலையை பிரகடனம் செய்துள்ளனர்.
ஆளும் உயரடுக்குகள் போருக்கு தயாரிப்பு செய்கின்ற நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட்டாக வேண்டும். போரின் காரணங்களை புரிந்து கொள்வதென்பது போருக்கு எதிரான போராட்டத்தின் அத்தியாவசியமான அடித்தளமாய் இருக்கிறது.
கடந்த இரு ஆண்டுகளில், சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் இந்தியா ஒரு உண்மையான 'முன்நிலை அரசாக' மாற்றப்பட்டதுடன், இந்திய-அமெரிக்க உறவுகள் ஒரு பண்பு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன
வட இந்தியாவிலுள்ள மாருதி சுசூகியின் மானேசர் கார் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில் வேலை செய்த தொழிலாளர்களான இந்த 13 பேரும், ஆளும் வர்க்கம் செய்த சதியின் விளைவாக, இந்திய சிறைச்சாலை எனும் ஒரு வாழும் நரகத்தில் எஞ்சிய வாழ்நாட்களை கடத்துகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
அடிமைத்தனத்தை ஒழித்த ஒரு ஆவணத்தில் லிங்கன் தனது கையொப்பத்தை இட்டார். பராக் ஒபாமாவோ ஒவ்வொரு வாரமும் தனிநபர்களை சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகளுக்கு ஆட்படுத்தும் பத்திரங்களில் கையெழுத்திடுகிறார்.
கடந்த இரு ஆண்டுகளில், சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் இந்தியா ஒரு உண்மையான 'முன்நிலை அரசாக' மாற்றப்பட்டதுடன், இந்திய-அமெரிக்க உறவுகள் ஒரு பண்பு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன.
போர் என்பது தவிர்க்கமுடியாதது என்று அனுமானிக்கப்பட்டு விட்டால், அப்போது தலைவர்கள் மற்றும் இராணுவங்களின் கணிப்பீடுகள் மாறுகின்றன. போர் வேண்டுமா அல்லது அது செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியெல்லாம் அதன்பின் எழுவதில்லை, எப்போது மிகவும் சாதகமான முறையில் போரிடமுடியும் என்பதே அப்போது கேள்வியாக இருக்கும்
உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார முரண்பாடுகள் தீவிரமடைகையில், மனித நாகரீகத்தின் அழிவையே அச்சுறுத்துகின்ற வகையில், உலகை பங்கீடு மற்றும் மறுபங்கீடு செய்யும் ஒரு புதிய போர் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பேரழிவைத் தடுப்பதில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?
இந்த முதன்முதல் இணையவழி சர்வதேச மே தினக் கொண்டாட்டத்தில் உலகெங்கும் இருந்து பங்கேற்றிருக்கும் உழைக்கும் மக்களையும் மற்றும் இளைஞர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பாக முதற்கண் நான் வரவேற்கிறேன். 60க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இதில் பங்கேற்றுள்ளனர்
குஜராத்தில் முஸ்லிம் விரோத படுகொலைகளில் அவர் ஆற்றிய மத்திய பங்கின் காரணமாக மோடியை நாட்டுக்குள் நுழையாமல் அமெரிக்கா பல ஆண்டுகள் தடை விதித்திருந்தது. இப்போது அதே மோடி, வாஷிங்டனின் விருப்பத்துக்குரிய பங்காளியாகியுள்ளார். அவரது “மனித உரிமை சாதனைகள்” அலட்சியம் செய்யப்பட்டு அவருக்கு இராஜ மரியாதை வழங்கப்படுகின்றது
அனைத்து தேசியவாத, வகுப்புவாத மற்றும் இனப் பிளவுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையின் நாளாக இந்நாள் வெளிப்பட்டுள்ளது. இந்தப் பாரம்பரியங்களை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம், உலகத் தொழிலாள வர்க்கத்தின் ஒரே உண்மையான சர்வதேச சோசலிச கட்சியாக மீண்டும் நான்காம் அகிலம் தன்னை நிரூபித்துள்ளது