கோவிட்-19 மூடிமறைப்பை CDC அதிகரிக்கையில், நோய்தொற்றுக்களையும் இறப்புகளையும் வாராந்திர அறிக்கையிடலுக்கு மாற்றுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கோவிட்-19 தரவுகளை கண்காணிப்பதற்கான அதன் தேசிய நெறிமுறைகளை அமைதியாக புதுப்பித்து, கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்கள் பற்றிய தினசரி அறிக்கையிடல் நடைமுறையை அக்டோபர் 20 முதல் வாராந்திர அறிக்கையிடல் முறைக்கு மாற்றியது. இந்த இலையுதிர் மற்றும் குளிர் காலங்களில் அமெரிக்கா முழுவதும் தொற்றுநோயின் மற்றொரு பேரழிவுகரமான எழுச்சி நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதற்கு சற்று முன்னரும், மற்றும் நவம்பர் 8 அன்று நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னரும் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, பைடென் நிர்வாகத்தின் ‘என்றென்றும் கோவிட்’ கொலைவெறி கொள்கையின் ஒரு பெரிய விரிவாக்கத்தைக் குறிப்பதுடன், ‘தொற்றுநோய் முடிந்துவிட்டது’ என்பதான பைடெனின் பொய்யுடன் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

CDC இன் கொள்கை மாற்றத்திற்கு எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை, இது சந்தேகத்திற்கு இடமின்றி இயக்குனர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கியின் நேரடி ஒப்புதலைப் பெற்றிருந்தது. அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பக்கத்தில், இந்த மாற்றம் ‘அறிக்கையிடுவதில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும், மாநிலங்கள் மற்றும் அதிகார வரம்புகளில் அறிக்கையிடல் சுமையைக் குறைக்கும், மேலும் கண்காணிப்பு வளங்களை அதிகப்படுத்தும்’ என்று அமைப்பு கூறுகிறது. உண்மையில், மாநிலங்களுக்கு ‘அறிக்கையிடல் சுமை’ என்று எதுவும் இல்லை, மற்றும் ‘கண்காணிப்பு வளங்கள்’ எதுவும் இப்போது இப்போது நடைமுறையில் இல்லை.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னர் ஓமிக்ரோன் மாறுபாடு தோன்றியதிலிருந்து, பெரும்பாலான அமெரிக்க மாநிலங்கள் தங்கள் கோவிட்-19 தரவு அறிக்கையிடலையும் கண்காணிப்பு அமைப்புகளையும் முறையாக நீக்கிவிட்டன. ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் ஆதார மையத்தின் கூற்றுப்படி, அதிர்ச்சியூட்டும் வகையில் 32 மாநிலங்கள் ஏற்கனவே கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பற்றிய வாராந்திர அறிக்கையிடலுக்கு மாறியுள்ளன, அதே நேரத்தில் 29 மாநிலங்கள் மட்டுமே இறப்புக்கள் பற்றி வாராந்திர அறிக்கை செய்கின்றன. வடக்கு டகோட்டா, நெப்ராஸ்கா மற்றும் கொலம்பியா மாவட்டம் ஆகியவை கோவிட்-19 இறப்புக்கள் பற்றி அறிக்கை செய்வதை முற்றிலும் நிறுத்திவிட்டன. மேலும், CDC இன் புதிய கொள்கையின் விளைவாக, வரும் வாரங்களில் அனைத்து மாநிலங்களும் வாராந்திர அறிக்கையிடல் முறைக்கு மாறக்கூடும்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், வெள்ளை மாளிகை மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரால் நடத்தப்படும் மாநில அரசாங்கங்கள் ஆகியவை பரிசோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் நடவடிக்கைகளை குறைத்துவிட்டன, மேலும் தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் தொடர்பான வழிகாட்டுதல்களை நீக்கியுள்ளன. அரசாங்க நிதி பெற்ற பரிசோதனைத் தளங்கள் மூடப்பட்டு, பதிவு செய்யப்படாத வீட்டில் செய்யும் பரிசோதனைகளுக்கு மாறியதால், தினசரி புதிய நோய்தொற்றுக்களின் உத்தியோகபூர்வ ஏழு நாள் சராசரி 41,248 ஆகக் குறைந்துள்ளது. சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) மதிப்பீட்டின்படி, தினசரி புதிய நோய்தொற்றுக்களின் உண்மையான எண்ணிக்கை இப்போது சுமார் 530,000 ஆக உள்ளது, அதாவது உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட இது 12 மடங்கு அதிகமாகும். ஆகஸ்டில், CDC, நோய்தொற்றுக்கு வெளிப்பட்ட நபர்களைத் தனிமைப்படுத்துவதற்கு எதிராகவும், அத்துடன் பெரும்பாலான அமைப்புகளில் தொடர்புத் தடமறிதல் மற்றும் கண்காணிப்பு பரிசோதனைகளுக்கு எதிராகவும் பரிந்துரைத்தது.

கோவிட்-19 நோயால் ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 அமெரிக்கர்கள் இறப்பதாக உத்தியோகபூர்வ பதிவு உள்ள நிலையில், அல்லது ஒவ்வொரு வாரமும் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களின் இறப்பு எண்ணிக்கைக்கு தோராயமாக கோவிட் இறப்பு சமமாக உள்ள நிலையில், CDC இன் இந்த சமீபத்திய கோவிட் மூடிமறைப்பு நடக்கிறது. தரவு அறிக்கையிடல் குறைப்பு என்பது, கடந்த ஆண்டில் சீனாவைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் திணிக்கப்பட்ட தொற்றுநோயை பரந்தளவில் இயல்பாக்கும் ஒரு உலக நடைமுறையின் மையமாக உள்ளது.

இந்த மாபெரும் சமூகக் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதால், பெருநிறுவன ஊடகங்கள் கடமை உணர்வுடன் தொடர்ந்து மவுனம் சாதித்து, அதன் மூலம் தீவிரமடைந்து வரும் கோவிட் மூடிமறைப்பை எளிதாக்கியுள்ளன. சமீபத்திய CDC கொள்கை மாற்றம் பற்றி, ஒட்டுமொத்தமாக ஆயிரக்கணக்கான பணியாளர் எழுத்தாளர்களைக் கொண்டுள்ள நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பொலிட்டிகோமற்றும் பிற முன்னணி செய்தி வெளியீடுகளில் எந்த அறிக்கையும் வெளிவரவில்லை, அதேவேளை ஒலிபரப்பு ஊடகங்களும் இந்தப் பிரச்சினையை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளன.

இந்த வாரம், CDC தனது இணைய தளத்தில் இருந்து வெளி நாடுகளுக்கான கோவிட்-19 பயண ஆலோசனைகளை அமைதியாக நீக்கியது, மேலும் வெள்ளியன்று, கோவிட்-19 நோயாளிகள் பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவப் பராமரிப்பு மையங்களைக் கண்டறிய உதவுவதற்கு என வடிவமைக்கப்பட்ட ‘சுய சரிபார்ப்பு’ சாட்போட்டையும் அகற்றியது. இந்த இரண்டு நடவடிக்கைகள் பற்றி கிட்டத்தட்ட முழுமையாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு முழுவதும், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மட்டும் தான் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்தது, மேலும் பைடென் நிர்வாகமும் மற்றும் பிற உலக அரசாங்கங்களும் அனைத்துத் தணிப்பு நடவடிக்கைகளையும், தரவு சேகரிப்பு நடவடிக்கைகளையும் கைவிடவும், மற்றும் தொற்றுநோய் விவகாரத்தை மூடிமறைக்கவும் செய்த அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து அம்பலப்படுத்தியது.

ஜனவரி மாதம், உடல்நலம் மற்றும் மனித சேவைகள் துறை (HHS) அமெரிக்க மருத்துவமனைகளில் இருந்து தினசரி கோவிட் இறப்புக்கள் மற்றும் கோவிட் தொடர்பான பிற முக்கிய தரவுகளின் அறிக்கைகளை சேகரிப்பதை முடித்துக் கொண்டது பற்றி WSWS மட்டுமே செய்தி வெளியிட்டது. மார்ச் மாதத்தில், CDC தனது தரவு கண்காணிப்பு அமைப்பில் (Data Tracker system) இருந்து 72,000 க்கும் மேற்பட்ட கோவிட்-19 இறப்புக்களின் பதிவை திடீரென நீக்கியது பற்றியும் WSWS மட்டுமே தீவிரமாக அறிக்கை செய்தது. ஒவ்வொரு திருப்பத்தின் போதும், ஒவ்வொரு புதிய தணிப்பு நடவடிக்கையின் முடிவுக்கு எதிராக WSWS தான் குரல் கொடுத்தது.

CDC வாராந்திர அறிக்கையிடலுக்கு மாறுவது பற்றி வியாழனன்று செய்தி வெளியானதும், ஏராளமான விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் மற்றும் கோவிட் எதிர்ப்பு ஆர்வலர்களும் இந்த சமீபத்திய விஞ்ஞான விரோத கொள்கையை கண்டித்தனர். பரவலாக பகிரப்பட்ட ஒரு ட்வீட்டில், இருதய நோய் நிபுணரும், மருந்து மற்றும் உடல்நல விஞ்ஞானத்திற்கான ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக பள்ளியைச் சேர்ந்த மருந்து மற்றும் அறுவை சிகிச்சை பேராசிரியருமான டாக்டர். ஜொனாதன் ரெய்னர், 'குளிர்காலம் தொடங்குதல் மற்றும் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு ஆகியவற்றுடன், இந்த மாற்றத்திற்கான வெளிப்படையான அரசியல் விளக்கத்தை புறக்கணிப்பது கடினம். ஏனெனில், அதற்கு எந்த விஞ்ஞானபூர்வமான காரணமும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்தக் கொள்கைகளின் பயங்கரமான விளைவுகளை நிரூபிக்கும் ஆதாரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தீவிரமடைந்துவரும் கோவிட் மூடிமறைப்பின் சமீபத்திய கட்டம் நடைபெறுகிறது. புதன்கிழமை, அதாவது வாராந்திர கோவிட்-19 அறிக்கையிடலுக்கு மாறுவதை CDC அறிவித்த அதே நாளில், அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் நெடுங்கோவிட் குறித்த அதன் Household Pulse Survey இன் சமீபத்திய புள்ளிவிபரங்களை வெளியிட்டது.

அமெரிக்காவில் தற்போது 15 மில்லியன் பெரியவர்கள் நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 81.4 சதவிகிதம் பேர் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கூட சிரமங்களை அனுபவித்து வருவதாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. மொத்தத்தில், நெடுங்கோவிட் அறிகுறிகளைக் கொண்ட சுமார் 3.8 மில்லியன் அமெரிக்க பெரியவர்கள் ‘நிறைய,’ அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் திறனை அது குறைக்கிறது, அதே நேரத்தில் மற்றொரு 8.5 மில்லியன் மக்கள், நெடுங்கோவிட் அறிகுறிகள் தங்களது திறனை ‘கொஞ்சம்’ குறைப்பதாக கூறுகின்றனர்.

இந்த புள்ளிவிபரங்கள் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையுடன் ஒத்துப்போகின்றன, இது 4 மில்லியன் அமெரிக்க பெரியவர்கள் நெடுங்கோவிட் பாதிப்பால் செயலிழந்து வேலைகளை விட்டு வெளியேறியுள்ளதைக் கண்டறிந்துள்ளது.

ஏராளமான விஞ்ஞான ஆய்வுகள், நோய்தொற்றின் நிரந்தர அலைகளை குறிப்பதான ‘என்றென்றும் கோவிட்’ கொள்கையானது, மக்கள்தொகையில் கணிசமான பகுதியினரை தொடர்ந்து பாரியளவில் முடக்குவது, ஆயுட்காலத்தை மேலும் குறைப்பது மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை முறிவுப் புள்ளிக்கு இட்டுச் செல்வது ஆகியவற்றை விளைவிக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

நெடுங்கோவிட் பற்றிய மிக விரிவான ஆய்வுகளில் பலவற்றிற்கு படைவீரர் விவகார செயின்ட் லூயிஸ் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் கல்விச் சேவையின் தலைவரான டாக்டர். ஜியாத் அல்-அலி தலைமை தாங்கினார். செப்டம்பர் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரது குழுவின் மிக சமீபத்திய சக மதிப்பாய்வு அறிக்கை, கோவிட்-19 நோய் ஒருவரின் நரம்பியல் கோளாறுக்கான ஆபத்தை 42 சதவிகிதம் அதிகரிக்கிறது என்பதையும், ஒவ்வொரு 100 கோவிட்-19 நோயாளிகளில் 7 பேருக்கு, பக்கவாதம், அல்சைமர் நோய், வலிப்பு, பார்கின்சன் போன்ற அறிகுறிகள், பதட்டம் மற்றும் மனச்சோர்வு மற்றும் பிற நரம்பியல் கோளாறுகள் உட்பட, ஏதாவது ஒரு வகை நரம்பியல் கோளாறு ஏற்பட்டிருப்பதையும் கண்டறிந்துள்ளது. மேலும், மற்ற ஆய்வுகள், கோவிட்-19 ஆல் பல இருதய நோய்கள், நீரிழிவு நோய், சிறுநீரக நோய் மற்றும் பல நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிப்பதைக் கண்டறிந்துள்ளன.

தற்போது சக மதிப்பாய்வுக்கு உட்பட்ட ஜூன் 17 அன்று வெளியிடப்பட்ட ஒரு முன்கூட்டிய ஆய்வில், டாக்டர். அல்-அலியும் அவரது குழுவினரும், ஒருமுறை கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, இரண்டு அல்லது அதற்கு மேலாக கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த காரணத்தினாலும் இறப்பவர்களை விட இரண்டு மடங்கு அதிகமான இறக்கும் வாய்ப்பையும், மறுதொற்று ஏற்பட்டு ஆறு மாதங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மூன்று மடங்கு அதிக வாய்ப்பையும் கொண்டிருப்பதை கண்டறிந்தனர். மேலும், ஒருமுறை கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுடன் ஒப்பிடுகையில், மறுதொற்று ஏற்பட்டவர்களுக்கு இதய நோய், சிறுநீரக கோளாறுகள், மற்றும் பிற நோய்கள் மிக அதிக விகிதங்களில் ஏற்படுகின்றது. இந்த முடிவுகள் தடுப்பூசி போடப்படாதவர்களுக்கும், மறுதொற்று ஏற்படுவதற்கு முன்பு குறைந்தது முதல் அளவு தடுப்பூசி மட்டும் பெற்றவர்களுக்கும் பொருந்தும்.

இந்த ஆய்வின் முடிவுகளும் மற்றும் நெடுங்கோவிட் பற்றிய மிகப்பெரிய ஆய்வுகளும், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும், ‘வைரஸூடன் வாழ்வது’ என்று எதுவும் இல்லை என்பதையும், எந்த வகையிலும் தொற்றுநோய் ‘முடிந்துவிடவில்லை’ என்பதையும் தெளிவுபடுத்துகிறது. நிரந்தரமான வெகுஜன மரணத்தையும் மற்றும் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் எப்போதும் தொடர்ந்து செயலிழப்பதையும் தடுப்பதற்கு, SARS-CoV-2 வைரஸின் மனிதனுக்கு மனிதன் பரவும் அனைத்து வாய்ப்புக்களும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உலகளாவிய நோய்தொற்று ஒழிப்பு மட்டுமே ஒரே சாத்தியமான மூலோபாயம் ஆகும். இதற்கு, பாரிய பரிசோதனைகள், கடுமையான தொடர்புத் தடமறிதல், ஊதியத்துடன் கூடிய தற்காலிக பூட்டுதல்கள், பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல் மற்றும் பல தணிப்பு நடவடிக்கைகள் உட்பட, வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒவ்வொரு பொது சுகாதார நடவடிக்கைகளையும் உலகளவில் செயல்படுத்துவது தேவைப்படுகிறது.

1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் பூமியில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் பின்பற்றப்பட்டு வரும் பூஜ்ஜிய-கோவிட் ஒழிப்பு மூலோபாயமானது, இந்த மூலோபாயம் சாத்தியமானது மற்றும் பிற அனைத்து நாடுகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதை நிரூபிக்கிறது. சர்வதேச தொழிலாள வர்க்கம், கொள்கை பிடிப்புவாத விஞ்ஞானிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் முற்போக்கான அடுக்கினருடன் ஒன்றுபட்டு, இந்த மூலோபாயத்தை உலகம் முழுவதும் செயல்படுத்துவதற்குப் போராட வேண்டும்.

முதலாளித்துவ உயரடுக்கால் கோரப்பட்டு, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் பிற பொது சுகாதார அமைப்புகளுக்கு தலைமை தாங்கும் குட்டி முதலாளித்துவ அதிகாரத்துவத்தின் ஊழல் அடுக்குகளால் செயல்படுத்தப்பட்ட, இந்த சமூகவிரோத தொற்றுநோய் கொள்கைகளானது, உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையினரின் சமூகத் தேவைகளுடன் பொருந்தாதது, மேலும் அவை நனவுடன் நிராகரிக்கப்பட வேண்டும்.