மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஒரு வருடத்திற்கும் மேலாக, ஓமிக்ரோனின் துணைமாறுபாடுகள் எண்ணற்ற துணை பரம்பரைகளாக விரைவாக தோன்றி மறைந்து அடுத்தடுத்து தொற்றுநோய்களின் அலைகளை உருவாக்குகின்றன. தற்போது கவலையளிக்கும் XBB.1.5 துணை மாறுபாட்டின் சமீபத்திய மறுபரவலானது, சுகாதார அதிகாரிகள், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் உலக பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பின் சுருக்கச் செய்தியாளர் கூட்டத்தில், முன்னணி விஞ்ஞானி டாக்டர் மரியா வான் கெர்கோவ் XBB.1.5 ‘இதுவரை கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் துணைமாறுபாடுகளில் மிகவும் பரவக்கூடிய வகை’ என்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: 'உலகம் முழுவதும் தொற்றுநோய்களின் புதிய அலைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால் எங்கள் எதிர் நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுவதால் இதை இறப்புகளின் புதிய அலைகளாக மொழிபெயர்க்கக்கூடாது' என்றார். அதாவது, XBB.1.5 துணைமாறுபாடு அதிக நோய்தொற்றுக்களுக்கும் மறுதொற்றுக்களுக்கும் வழிவகுக்கும், அவை சுகாதார அமைப்புக்களை நெருக்கடியில் மூழ்கடிக்கும், மேலும் அதனால் மக்கள் தேவையில்லாமல் இறக்க நேரிடும் என்பதை இந்த நம்பிக்கையூட்டும் கூற்று மூடிமறைக்கிறது.
கூடுதலாக, SARS-CoV-2 வைரஸின் தீவிர பரவலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சுகாதார அமைப்புகளின் தரப்பில் எந்தவித முயற்சியும் எடுக்கப்படாமல் தடையின்றி அதை பரவ அனுமதிப்பது என்பது, வைரஸ் மரபணு ரீதியாக தொடர்ந்து மாற்றமடைவதற்கு வழிவகுக்கும், மக்கள்தொகையின் தற்போதைய நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்க அனுமதிக்கும் வகையில் வைரஸ் மரபணு மாற்றத்தைத் தொடரும் என்பதே இதன் பொருள். இன்னும் அதிக நோய்க்கிருமி வடிவமாக உருவாகலாம், கொடியதாகவும் மேலும் வீரியமிக்கதாகவும் மாறும்.
ஓமிக்ரோனின் எப்போதும் வளர்ந்து வரும் சிக்கலான துணை வகைகளை வேறுபடுத்தும் வகையில், கனடாவைச் சேர்ந்த உயிரியல் பேராசிரியரான டாக்டர் ரியான் கிரிகோரி, XBB.1.5 துணைமாறுபாட்டிற்கு ‘கிராக்கன்’ என்று பெயரிட்டுள்ளார் – இது நோர்வேஜியன் புராண கடல் அரக்கனின் பெயராகும். டிசம்பர் 28, 2022 ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதுபடி, “XBB.1.5 நிச்சயமாக அதன் சாதனை அமைப்பு வளர்ச்சி நன்மை, உச்சபட்ச நோயெதிர்ப்பு தவிர்க்கும் திறன் மற்றும் ACE2 பிணைப்பு ஆகியவற்றால் ஒரு புனைபெயரைப் பெறுகிறது.”

XBB.1.5 துணைமாறுபாட்டின் சமீபத்திய முன் வகைகளான XBB (Gryphon) மற்றும் XBB.1 (Hippogryph) போன்றவை இந்தியாவில் ஆகஸ்ட் நடுப்பகுதியில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டன. அவை விரைவாக ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பரவி, இந்தியாவில் ஆதிக்க வகையாக உருவெடுத்துள்ளது, மேலும் அதிக அளவு தடுப்பூசி போடப்பட்ட நகர-நாடான சிங்கப்பூரில் மிகப்பெரிய அளவிலான தொற்றுநோய் அலையை உருவாக்கியுள்ளது. சமீபத்திய துணைமாறுபாடானது அமெரிக்கா உட்பட இரண்டு டஜன் நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது, அங்கு இது அக்டோபர் தொடக்கத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
BA.5 அழிவின் விளிம்பில் உள்ளது மற்றும் BQ.1.1 (ஜனவரி 7, 2023 நிலவரப்படி 34.4 சதவீதம்) வீழ்ச்சியடைந்து வருகிறது, XBB.1.5 நாட்டில் உள்ள மற்ற அனைத்து துணை வகைகளையும் வேகமாக மாற்றுகிறது. இது கண்காணிக்கப்பட்ட அனைத்து பரம்பரைகளிலும் 27.6 சதவீத நோய் பரவலை இது உருவாக்குகிறது (மதிப்பீடு கடந்த வாரத்தின் 40 சதவீதத்திலிருந்து திருத்தப்பட்டது).
இது நவம்பர் மாத இறுதியில் அனைத்து துணை வகைகளின் ஒரு சதவீத வரம்பைத் தாண்டியது, இந்த நிலையில் இது கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு துணை வகையாக இருப்பதால் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்கள் (CDC) இதன் பரவல் விகிதம் குறித்து வாராந்திரம் அறிக்கை செய்ய வேண்டும். இருப்பினும், CDC இல் உள்ள ஒரு நபர் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங்கிடம் இதன் பரவல் விகிதம் பற்றி கசியவிட்டதை அடுத்து, டிசம்பர் 29 அன்று சமூக ஊடகங்களில் டாக்டர் எரிக் தனது கவலைகளை ட்வீட் செய்ததன் பின்னரே பொது சுகாதார அமைப்பு இந்த துணைமாறுபாட்டின் இருப்பை உறுதிசெய்தது. இத்தகைய தகவல்களை CDC நசுக்குவது முதல்முறை அல்ல, அதாவது சேதத்தை கட்டுப்படுத்தும் விஷயமாக ஒரு தகவல் அம்பலமானதன் பின்னரே அதை CDC உறுதிசெய்யும்.
வெள்ளை மாளிகையின் கோவிட் தடுப்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளரான டாக்டர். ஆஷிஷ் ஜா கடந்த வாரம் சமூக ஊடகங்களில், XBB.1.5 காரணமான நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிரடி அதிகரிப்பு ‘அதிர்ச்சியூட்டுவதாக’ உள்ளதை ஒப்புக்கொண்டார். அதாவது, ‘அதிர்ச்சியூட்டுகிறது’ என்ற சொல் ஆச்சரியத்தை வெளிப்படுத்தவும், இந்த துணை வகையின் திடீர் வளர்ச்சியைத் தடுப்பதற்கான பொறுப்பைத் தவிர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வடகிழக்கு அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க காரணமாக இருந்தது. ஆயினும்கூட, அவர்கள் வசம் உள்ள பரந்த உலகளாவிய வளங்களைக் கருத்தில் கொண்டால், அத்தகைய சொற்கள் வெறுக்கத்தக்கது என்பதுடன், எந்தவொரு உண்மையான பொது சுகாதார ஆர்வலருக்கும் அது பாதுகாப்பற்றது.
டாக்டர். ஜா, “இது இயல்பாகவே அதிக தொற்றும் தன்மை உள்ளதா? இருக்கலாம். இது மனித ACE ஏற்பியுடன் மிகவும் இறுக்கமாக பிணைகிறது” என்று குறிப்பிட்டார். இது தொற்றும்தன்மையைப் பாதிக்கக்கூடும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார், பின்னர் உடனடியாக அதன் ஆபத்துகளை குறைத்து மதிப்பிட்டு, ‘தொற்று மற்றும் கடுமையான நோய்த் தன்மைக்கு எதிராக சிறந்த பாதுகாப்பளிப்பதாக’ கூறப்படும் ஈரிணைத் திறம் கொண்ட கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகளை போடுமாறு அவர் பரிந்துரைத்தார். தற்போது, அமெரிக்க மக்கள் தொகையில் 34 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், மேலும் CDC இன் கூற்றுப்படி, ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களில் 15.4 சதவீதம் பேர் மட்டுமே செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து புதுப்பிக்கப்பட்ட ஈரிணைத் திறம் உள்ள தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
டாக்டர் ஜா அவரது வழமையான அலட்சியமான வெற்று வார்த்தைகளில் இவ்வாறு நிறைவு செய்தார், “எனவே, XBB.1.5 பற்றி நான் கவலைப்படுகிறேனா? ஆம். இது ஏதோ பெரிய பின்னடைவைக் குறிப்பதாக நான் கவலைப்படுகிறேனா? இல்லை. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்பட முடியும். நாம் அனைவரும் நம் பங்கைச் செய்தால், அது நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்கலாம்.” ‘ஒன்றாக வேலை செய்வோம்’ மற்றும் ‘அனைவரும் நம் பங்கைச் செய்வோம்’ போன்ற அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் வெற்று பிரச்சார வாக்குறுதிகள் போன்றே தெரிகின்றன. வேற் வார்த்தைகளில் கூறுவதானால், இது ‘இங்கே கவனிப்பதற்கு எதுவும் இல்லை’ மேலும் ‘அடுத்ததைப் பாருங்கள்’ என்ற அரத்தங்களை வழங்குவதாகவே உள்ளன.
இதற்கிடையில், தற்போது வடகிழக்கில் அமைந்துள்ள அதன் முக்கிய நோய்தொற்று மையம் உட்பட நாடு முழுவதும் கோவிட் நோய்தொற்றுக்களின் குறிப்பிடத்தக்க எழுச்சி உருவெடுத்துள்ளது, அங்கு XBB.1.5 வரிசைப்படுத்தப்பட்ட துணைமாறுபாடுகளில் 70 சதவீத நோய் பரவல் விகிதத்தைக் கொண்டுள்ளது. வடகிழக்குப் பகுதி தான் எப்போதுமே நாட்டின் மற்ற பகுதிகளில் நோய்தொற்றுக்கள் வேகமெடுத்துப் பரவ வழி செய்கிறது, மேலும் விரைவில் மற்ற எல்லா பிராந்தியங்களிலும் கோவிட் நோய்தொற்றுக்கள் மீண்டும் அதிகரிக்கும்.
அமெரிக்கா முழுவதும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது நாளாந்தம் 100,000 பேருக்கு 16 பேர் என்ற விகிதத்தில் உள்ளது, இது தொற்றுநோயின் போதான மூன்றாவது மிக உயர்ந்த உச்சமாகும். அங்கு தற்போது 50,000 கோவிட் நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர், இது 14 நாட்களில் நிகழ்ந்துள்ள 17 சதவீத அதிகரிப்பாகும். இறப்புக்கள் 20 சதவீதம் அதிகரித்து ஒரு நாளைக்கு 514 ஆக உள்ளது, 90 சதவீத அளவிற்கு 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் இறக்கின்றனர்.
கொரோனா வைரஸின் நோயெதிர்ப்பு பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளவரும், மற்றும் அதற்கு எதிராக மியூகோசல் கிருமி நீக்கம் செய்யும் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவருமான, Yale School of Medicine இல் நோயெதிர்ப்புவியல் மற்றும் உயிரியல் பேராசிரியர் அகிகோ இவாசாகி, தனது சமீபத்திய ட்வீட்டீல் இவ்வாறு எச்சரித்துள்ளார், “N95 முகக்கவசங்களை அணிந்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கவும். இந்த நோய்தொற்றைத் தொடர்ந்து வரக்கூடிய நெடுங்கோவிட் அலை குறித்து நான் உண்மையிலேயே கவலைப்படுகிறேன். XBB.1.5 இன் தூண்டுதல் திறன் ACE2 இன் குறைந்த அளவுகளை வெளிப்படுத்தும் செல் வகைகளைப் பாதிக்கும் திறனைக் கொண்டிருப்பதால் நான் கவலைப்படுகிறேன். இது வெப்பத்தை அதிகரிக்கும் மற்றும் நீண்ட காலம் வாழும் [நியூரான்கள்] உயிரணு வகைகளில் நிலைத்தன்மையை அதிகரிக்கும்.”

XBB.1.5 என்று துணைமாறுபாடானது, BJ.1 (BA.2.10.1.1) மற்றும் BM.1.1.1 (BA.2.75.3.1.1.1) ஆகிய இரண்டு BA.2 துணை வகைகளின் இணைவு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு மறுசேர்ப்பு வகையாகும். பேர்ன் பல்கலைக்கழகத்தில் சமூக மற்றும் தடுப்பு மருந்து நிறுவனத்தில் பிரிட்டிஷ்-அமெரிக்க மூலக்கூறு தொற்றுநோயியல் நிபுணராக உள்ள டாக்டர் எம்மா ஹாட்கிராஃப்ட், ஒரு கட்டத்தில் அவை இரண்டும் ஒரே நபரைத் தொற்றிக் கொண்டு, மரபணு மூலக்கூறை மீள இணைத்து மீண்டும் மீண்டும் பரிணமித்து XBB ஐ உருவாக்கியது என்று விளக்கினார்.

கலிபோர்னியாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி பன்னாட்டு நிறுவனத்தின் ஸ்தாபகரும் இயக்குனருமான டாக்டர் எரிக் டோபோல், டிசம்பர் 23, 2022 அன்று இவ்வாறு எழுதினார், “இப்போது இது நியூயோர்க் மாநிலத்தில் காணப்படுகிறது, XBB புதிய பிறழ்வுகளுடன் இணைந்து XBB.1.5 ஆக மேலும் பரிணமித்துள்ளது, இது சில வாரங்களுக்கு முன்னர் JP வெய்லாண்ட் [டிசம்பர் 15, 2022, ட்வீட்டில்] பொருத்தமாக முதலில் குறிப்பிட்டது போல, அங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் செங்குத்தான எழுச்சியின் தொடக்கத்துடன் ஒத்துப்போகிறது.”
XBB.1.5 பற்றிய டாக்டர் டோபோலின் விவரணம், கிராக்கனைப் பெற்றிருக்கும் F486P பிறழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவது, அதன் முன்னோடி வகைகளின் வம்சாவளியைக் காட்டிலும் அது மேம்பட்டிருப்பதைக் குறிக்கிறது. SARS-CoV-2 ஆனது தற்போது நோயெதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கத் தேவையான மரபணு மாற்றங்களைக் கொண்டு சீர் செய்யும் ஒரு நோயாளி விளையாட்டை விளையாடுவதுடன், பாதுகாப்பாக உடைக்க முயற்சிக்க ஒரு பூட்டின் சாவியுடன் விளையாடும் திருடன் போன்ற ஒரு முக்கிய புரதத்தை அது கண்டுபிடித்துள்ளது.
நியூயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையின் முன்னணி மற்றும் மூத்த ஆசிரியர்கள், செல் இதழில் வெளியிடப்பட்ட தங்களின் ஆய்வறிக்கையில், “எழுந்து வரும் SARS-CoV-2 BQ மற்றும் XBB துணை வகைகளின் ஆபத்தான நோயெதிர்ப்பு ஏய்ப்பு பண்புகள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளனர்.
அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர், “புதிய ஈரிணைத் திறம் உள்ள mRNA தடுப்பூசிகளுடன் சமீபத்தில் கூடுதல் எதிர்ப்பு சக்தி வழங்கப்பட்ட நபர்கள் உட்பட, முன்னர் தொற்று ஏற்பட்ட அல்லது ஏற்படாத தடுப்பூசி போடப்பட்ட நபர்களிடமிருந்து செரா மூலம் நடுநிலைப்படுத்துவதற்கு இந்த புதிய துணை வகைகள் அரிதாகவே பாதிக்கப்படுகின்றன என்பதை எங்கள் தரவு நிரூபிக்கிறது. இங்கு அளவிடப்பட்ட ஆன்டிஜெனிக் சறுக்கல் அல்லது மாற்றத்தின் அளவு, ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பகட்ட ஓமிக்ரோன் மாறுபாட்டால் உருவாக்கப்பட்ட ஆன்டிஜெனிக் வேகத்துடன் ஒப்பிடத்தக்கது.” பொதுவான மொழியில், XBB.1.5 என்பது முற்றிலும் புதிய மாறுபாட்டிற்குச் சமமானதாகும்.
அமெரிக்காவில் கோவிட் நோயின் குளிர்கால அலை மீண்டும் எழுந்துள்ளது. XBB.1.5 இன் தீவிரத்தன்மை குறித்த தரவுகள் எதுவும் இல்லை, ஆனால் நேரம் மிக விரைவில் சொல்லும். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் தலைமை பொது சுகாதார நிறுவனங்களின் நோய்தொற்றுக்கள் ‘தடையின்றி பரவட்டும்’ கொள்கையானது, உலக மக்கள் தொகையை தொடர்ந்து ‘செயல்பாட்டின் ஆதாயம்’ என்ற சோதனைக்கு உட்படுத்துகிறது, இதில் SARS-CoV-2 வைரஸ் காணும் பாரிய பிறழ்வு, தொற்றுநோயின் புதிய மற்றும் இன்னும் பயங்கரமான நோய்தொற்று அலையின் அதிகரித்து வரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
சீனா அதன் மிகவும் வெற்றிகரமான பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்து, அதன் 1.4 பில்லியன் மக்களை கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் அது முழுமையாக மீளத் திறக்கப்பட்டுள்ளதானது நெருக்கடியை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.
ஏறக்குறைய அனைத்து தணிப்பு நடவடிக்கையும் கைவிடப்பட்டு, புதிய வகைகளை நாடுகள் கண்காணிப்பதும் வரிசைப்படுத்துவதும் 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 90 சதவீதம் குறைந்து, கண்மூடித்தனமாக நான்காவது ஆண்டிற்குள் நுழைகையில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
இந்த வளர்ச்சிகளை எக்னாமிஸ்ட் பத்திரிகை கவனமாக உற்றுநோக்கி இவ்வாறு எழுதியுள்ளது, “கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட பரிசோதனை, வரிசைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு திறன் ஆகியவற்றை அகற்றுவது என்பது அடுத்த தொற்றுநோய்க்கு உலகை ஆயத்தமில்லாமல் ஆக்குகிறது. அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கும் நிரந்தர ஸ்தாபனங்களைப் பேணுவது அவசியமான ஒன்று என அரசியல்வாதிகள், இறுதியாக, ஆட்சியை பாதுகாக்கும் வகையில், தொற்றுநோயை நோயாகப் பார்க்கும் நம்பிக்கை மங்கிப் போவதாகத் தெரிகிறது.