நான்காம் அகிலம் சோசலிச புரட்சியின் உலகக் கட்சியாகும். சோவியத் ஒன்றியத்தினதும்கம்யூனிச(மூன்றாம்) அகிலத்தினதும்ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக மார்க்சிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் இது ஸ்தாபிக்கப்பட்டது.
ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான ஒரு தேசியவாத அதிகாரத்துவத்தால் அதிகாரத்தை கைப்பற்றுவதை எதிர்ப்பதற்காகவும், 1917 இல் ரஷ்ய புரட்சிக்கு உயிரூட்டிய சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தை பாதுகாக்கவும், ட்ரொட்ஸ்கி 1923 இல் இடது எதிர்ப்பு இயக்கத்தை ஸ்தாபித்தார். 1933 இல், ஸ்ராலினிசத்தின் பேரழிவுக் கொள்கைகளால் எளிதாக்கப்பட்டு, நாஜிக்கள் ஆட்சிக்கு வந்ததும், ட்ரொட்ஸ்கி ஒரு புதிய (நான்காம்) அகிலத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார்.
ஸ்தாபிக்கப்பட்ட பல தசாப்தங்களின் பின்னர், நான்காம் அகிலத்திற்குள் திருத்தல்வாத போக்குகள் மீண்டும் மீண்டும் வெளிவந்தன, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கான அதன் நோக்குநிலையை கைவிடுமாறு ஒரு வடிவத்தில் அல்லது இன்னொரு வடிவத்தில் வாதிட்டன, அதற்கு பதிலாக இந்த அல்லது அந்த குட்டி முதலாளித்துவ, ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அல்லது முதலாளித்துவ தேசியவாத போக்குகளை நோக்கிய ஒரு நோக்குநிலைக்கு அழைப்பு விடுத்தன.
அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிறுவனர் ஜேம்ஸ் பி. கனன் தலைமையிலான மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கும் மிஷேல் பப்லோ, ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான சந்தர்ப்பவாதப் பிரிவுக்கும் இடையில் நான்காம் அகிலத்தில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) நவம்பர் 23, 1953 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடும் ICFI, மார்க்சிசத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்தியுள்ளது, இன்று உலகில் புரட்சிகர சோசலிசத்தின் ஒரே பிரதிநிதியாக உள்ளது.
இந்த பக்கத்தில், வாசகர்கள் நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்த கட்டுரைகள், நூல்கள் மற்றும் தலைப்புகளுக்கான இணைப்புகளைக் காணமுடியும். எங்கள் நூலகத்தில் கிடைக்கும் படைப்புகளை கற்க எங்கள் வாசகர்களை ஊக்குவிக்கிறோம்.