இந்த ஆவணம், சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) கொழும்பில், மே 27-29, 2011 இல் நடாத்திய மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய துணைக் கண்டத்தில் புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சியின் சிக்கல்களை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆவணம் மிக முக்கியமானதாகும். இது, தெற்காசியாவில் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கான நான்காம் அகிலத்தின் 75 ஆண்டுகால போராட்டத்தின் முக்கியமான படிப்பினைகளை வரைகிறது.
இலங்கையில் பிரிட்டிஷ் சிறைகளில் இருந்து தப்பிய லங்கா சம சமாஜ கட்சியின் (LSSP) தலைவர்களால் 1942 ஆம் ஆண்டில் போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (BLPI) ஸ்தாபிக்கப்பட்டதானது, ஆசியாவில் நான்காம் அகிலத்திற்கான போராட்டத்திற்கு ஒரு தீர்க்கமான முன்னேற்றத்தைக் குறித்து நின்றது. தமிழ், சிங்கள தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைப்பதற்கான போராட்டத்தை கைவிட்டு, 1983 முதல் 2009 வரையான இரத்தக்களரி 25 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கான பாதையைத் திறந்துவிட்ட, 1964 ஆம் ஆண்டு திருமதி சிறிமா பண்டாரநாயக்கவின் கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்த LSSP யின் எழுச்சி, வீழ்ச்சி மற்றும் இறுதி துரோகம் ஆகியவற்றை இந்த ஆவணம் ஆராய்கிறது.
லங்கா சம சமாஜ கட்சியின் துரோகத்திலிருந்து அவசியமான அரசியல் படிப்பினைகளைப் பெறுவதற்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போராடிய ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்குவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) 1968 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆவணம், அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிரான RCL இன் கொள்கைப்பிடிப்பான மற்றும் தைரியம்மிக்க போராட்டத்தின் படிப்பினைகளை தொகுத்தளித்திருக்கிறது.
- அறிமுகம்
- நிரந்தரப் புரட்சித் தத்துவம்
- லங்கா சமசமாஜக் கட்சியின் ஸ்தாபிதம்
- லங்கா சம சமாஜக் கட்சி நான்காம் அகிலத்தின் பக்கம் திரும்பியது
- இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் ஸ்தாபிதம்
- இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கம்
- யுத்தத்துக்குப் பிந்திய புரட்சிகர எழுச்சிகளை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்தது
- சீனப் புரட்சி
- இந்தியப் பிரிவினை
- இலங்கையில் உத்தியோகபூர்வ சுதந்திரம்
- இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் கலைப்பு
- பப்லோவாத சந்தர்ப்பவாதம்
- பகிரங்க கடிதத்துக்கு லங்கா சமசமாஜக் கட்சியின் பதிலிறுப்பு
- லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் பின்சரிவு
- சோசலிச தொழிலாளர் கட்சியின் மறு ஐக்கியம்
- இலங்கையில் மாபெரும் காட்டிக்கொடுப்பு
- புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது
- குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்துக்கு எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த போராட்டம்
- பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் சீரழிவு
- இரண்டாவது கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சி
- ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் அது போரில் இறங்குவதும்
- புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் , தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் தேசியப் பிரச்சினை
- 1985-1986தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவு
- தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுக்குப் பின்னர்
- ஸ்ரீலங்கா - தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகள்
- நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் சர்வதேச முன்னோக்குகள்
- சோவியத் ஒன்றியத்தின் பொறிவு
- புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் ஐக்கிய முன்னணியும்
- புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் விவசாயிகளும்
- தேசியப் பிரச்சினை
- சோசலிச சமத்துவக் கட்சி
- உலக சோசலிச வலைத் தளம்
- 2000ஆவது ஆண்டின் இலங்கை நெருக்கடி
- போரும் இராணுவவாதமும்
- முதலாளித்துவத்தின் நெருக்கடியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்